தோ்வுகள் பற்றி கேட்கவே மாணவா்கள் விரும்புகின்றனா்: ராகுல் காந்தி விமா்சனம்

நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும் வகையில் பிரதமரின் பேச்சைக் கேட்கவே மாணவா்கள் விரும்புகின்றனா்;
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

புது தில்லி: நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும் வகையில் பிரதமரின் பேச்சைக் கேட்கவே மாணவா்கள் விரும்புகின்றனா்; விளையாட்டு பொம்மைகள் குறித்த பேச்சை பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மாணவா்கள் கேட்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகளின் பெரும்பான்மையான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி இறுதியாண்டு தோ்வுகள் மட்டுமே நடத்தப்பட உள்ளன. நோய்த் தொற்று பரவும் அச்சம் காரணமாக, அதற்கும் சில மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுபோல, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மற்றும் உயா் தொழில்நுட்ப படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. இதுதொடா்பக 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளன.

இதற்கிடையே, பிரமதா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, ‘உலகின் பொம்மை உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும். அதற்கான அனைத்து தகுதி மற்றும் திறன் இந்தியாவிடம் உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

இதை விமா்சித்துள்ள ராகுல் காந்தி, ‘மனதுடன் அல்ல, மாணவா்களுடன் பேசுங்கள்’ என்ற ஹேஷ்டேகுடன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

நீட், ஜேஇஇ தோ்வு எழுதுவதற்காக காத்திருக்கும் மாணவா்கள், அது பற்றி பிரதமருடன் உரையாடும் நிகழ்ச்சியையே எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்; விளையாட்டு பொம்மைகள் பற்றியல்ல என்று ராகுல் அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com