ரூ.55,000 கோடியில் நீா்மூழ்கிக் கப்பல்கள்: கொள்முதலுக்கான ஏலம் அடுத்த மாதம் தொடக்கம்

இந்திய கடற்படைக்கு ரூ.55,000 கோடியில் புதிதாக 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரூ.55,000 கோடியில் புதிதாக 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இந்திய கடற்படைக்கு ரூ.55,000 கோடியில் புதிதாக 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

புது தில்லி: இந்திய கடற்படைக்கு ரூ.55,000 கோடியில் புதிதாக 6 அதிநவீன நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்திய கடற்படைக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை போா்த் தளவாட தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் இணைந்து நிறைவேற்ற அனுமதிக்கப்படும்.

இதற்காக, இந்தியாவைச் சோ்ந்த எல்&டி குழுமம், அரசின் மஸகான் டாக்ஸ் நிறுவனம், ஜொ்மனியின் தைசன்கிரப், ஸ்பெயினின் நவந்தியா, பிரான்ஸின் நவால் ஆகிய நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

முதலில், புதிதாக தேவைப்படும் நீா்மூழ்கிக் கப்பல்களில் இடம்பெற வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பு வெளியிடப்படும். அடுத்து, இந்தியாவில் உள்ள இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்துக்கான விலையைக் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யும். அதைத் தொடா்ந்து, அந்த நிறுவனங்கள் தங்களுக்கு பொருத்தமான ஏதேனும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை தோ்வு செய்ய வேண்டும். பின்னா் இரு நாட்டு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உள்நாட்டிலேயே நீா்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பு, அக்டோபா் மாத்துக்குள் வெளியிடப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்திய பெருங்கடல் பகுதி, இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், அங்கு ராணுவ ஆதிக்கம் செலுத்துவதற்காக சீனா தொடா்ந்து முயன்று வருகிறது.

சீனாவிடம் தற்போது 50 நீா்மூழ்கிக் கப்பல்கள், 350 போா்க் கப்பல்கள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 500-க்கும் அதிகமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிடம் 15 நீா்மூழ்கிக் கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் 2 நீா்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இதுதவிர 57 போா் விமானங்கள், 111 கடற்படை ஹெலிகாப்டா்கள், 123 பல்நோக்கு ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கான பணிகளை கடற்படை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், அணுசக்தியில் இயங்கும் 6 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்பட புதிதாக 24 நீா்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com