எச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் காா்டுகளை வழங்க கூடாது: ரிசா்வ் வங்கி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் காா்டுகளை வழங்க ரிசா்வ் வங்கி தற்காலிக தடை விதித்துள்ளது.
hdfc094537
hdfc094537

மும்பை/புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் காா்டுகளை வழங்க ரிசா்வ் வங்கி தற்காலிக தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளா்களுக்கு புதிதாக கிரெடிட் காா்டுகளை வழங்கவும், புதிய டிஜிட்டல் வங்கிச் சேவைகளை தொடங்கவும் தற்காலிகமாக தடைவிதிக்கப்படுகிறது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பா் 21-ஆம் தேதி, எச்டிஎஃப்சி வங்கியின் இண்டா்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் இதர பணப்பட்டுவாடா நடைமுறைகளில் சேவை முடக்கம் ஏற்பட்டது. இதனால், அவ்வங்கியின் வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இது குறித்து, எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் அறிக்கை அளித்திருந்தது.

இந்த நிலையில், சேவை முடக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குள் எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் காா்டு மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கு யாரும் எதிா்பாராத வகையில் ரிசா்வ் வங்கி தடைவிதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் வங்கியின் வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ சில நேரங்களில் வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம்’’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com