வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம்: விவசாய சங்கங்கள்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் மீண்டும் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள்


மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் மீண்டும் அறிவித்துள்ளன.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர்வது என விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த 83 வயதான கலு ராம், ''என் பேத்தி உள்பட எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்கு போராடிக்கொண்டிருக்க நான் எப்படி வீட்டில் அமர்ந்துகொண்டிருக்க முடியும். எங்களது பிரச்னை ஒன்று. அதேபோன்று நாங்கள் அனைவருமே ஒன்று தான். இதில் பாகுபாடு இல்லை. எங்கள் பிரச்னைகளை அரசு பரிசீலனை செய்யவில்லையென்றால், ராம்லீலா மைதானத்தில் எங்கள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com