முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது: விவசாயத் தலைவர்கள்

நாடு தழுவிய முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவசர சேவைகளுக்கு அனுமதி உண்டு என்றும் விவசாயத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது: விவசாயத் தலைவர்கள்


நாடு தழுவிய முழு அடைப்புக்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவசர சேவைகளுக்கு அனுமதி உண்டு என்றும் விவசாயத் தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயத் தலைவர் பால்பீர் சிங் தெரிவிக்கையில், "போராட்டங்களுக்கு காரணமான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். புதிய சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர்த்து வேறு எதுவும் வேண்டாம்" என்றார்.

மற்றொரு விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலா தெரிவிக்கையில், "விவசாயிகள் அமைதி காக்க வேண்டும். முழு அடைப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது" என்றார்.

தர்ஷன் பால் தெரிவிக்கையில், "மீண்டும் பழைய சட்டங்களையே திரும்பக் கொண்டுவர வேண்டும். அது விவசாயிகளுக்கு விரோதமானது என்று கருதினாலும் அரசு அதையே கொண்டுவர வேண்டும்" என்றார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் விவசாயிகள் இடையிலான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை. போராட்டத்தின் பகுதியாக டிசம்பர் 8-இல் நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com