அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அமித்ஷாவை சந்திக்கவுள்ள விவசாயப் பிரதிநிதிகள்!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில், விவசாயிகள் செவ்வாய் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை சந்திக
விவசாயிகள் செவ்வாய் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை சந்திக்க உள்ளனர்
விவசாயிகள் செவ்வாய் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை சந்திக்க உள்ளனர்

புது தில்லி: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசிற்கு இடையே அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில், விவசாயிகள் செவ்வாய் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியின் எல்லைப் பகுதிகளில் பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மத்திய அரசிற்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை ஐந்துகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு வார்த்தை புதன்கிழமை நடைபெறும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் ஆதரவோடு, போராடும் விவசாயிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட ‘பாரத் பந்த்’ செவ்வாயன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகள் செவ்வாய் இரவு ஏழு மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினை சந்திக்க உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகளின் அமைப்பான பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத் கூறுகையில், ‘மத்திய உள்துறை அமைச்சரோடு எங்களுக்கு இன்று இரவு ஏழு மணிக்கு சந்திப்பு உள்ளது. தற்போது எல்லைப்புறப் பகுதியான சிங்குவிற்கு சென்று விட்டு அங்கிருந்து நேராக அமைச்சரைச் சந்திக்கப் போகிறோம்’ என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com