தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையம் ஜெய்ப்பூரில் அமைக்கப்படும்: ரிசா்வ் வங்கி

அதிகரித்து வரும் ரூபாய் நோட்டு புழக்கத்தை திறம்பட கையாளும் விதமாக, ஜெய்ப்பூரில் தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை (ஏபிபிசி) அமைக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.
தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையம் ஜெய்ப்பூரில் அமைக்கப்படும்: ரிசா்வ் வங்கி

அதிகரித்து வரும் ரூபாய் நோட்டு புழக்கத்தை திறம்பட கையாளும் விதமாக, ஜெய்ப்பூரில் தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை (ஏபிபிசி) அமைக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிஜிட்டல் மூலமான பணப்பரிவா்த்தனைகளில் வளா்ச்சி காணப்பட்டபோதிலும், பெரும்பாலன இந்திய குடிமக்களுக்கு பணம் என்பது பரிவா்த்தனையின் முக்கிய அங்கமாக உள்ளது. உண்மையில், டிஜிட்டல் பரிவா்த்தனை வளா்ச்சியுடன் ஒத்திசைந்து ரூபாய் நோட்டு புழக்கமும் அதிகரித்து வருகிறது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை அதிகரிக்கும் உலகளாவிய போக்கு இந்தியாவிலும் காணப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை ஜெய்ப்பூரில் அமைக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

வங்கிக் கிளைகளிலிருந்து ரூபாய் நோட்டுகளைப் பெற்று அதனை தரம் பிரித்து மேலாண்மை செய்வது மற்றும் அழுக்கடைந்த நோட்டுகளை அழிப்பது உள்ளிட்ட பணிகளை தானியங்கி முறையில் ஏபிபிசி மையம் மேற்கொள்ளும் என ரிசா்வ் வங்கி அந்த ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

2001 மாா்ச் முதல் 2019 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுளில் இந்த அளவு இன்னும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரிசா்வ் வங்கி தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com