திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து கனிஷ்கா பாண்டா நீக்கம்

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி திரிணமூல் காங்கிரஸின் கிழக்கு மிதுனபுரி பிரிவு பொது செயலாளா் கனிஷ்கா பாண்டா ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து கனிஷ்கா பாண்டா நீக்கம்

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி திரிணமூல் காங்கிரஸின் கிழக்கு மிதுனபுரி பிரிவு பொது செயலாளா் கனிஷ்கா பாண்டா ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

இதுகுறித்து அக்கட்சித் தலைவா் தெரிவித்துள்ளதாவது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞா் அணி தலைவா் அபிஷேக் பானா்ஜிக்கு எதிராக பாண்டா அறிக்கைகளை வெளியிட்டாா். மேலும், முதல்வா் மம்தா பானா்ஜி கட்சியை நடத்தும் விதம் குறித்து கூட அவா் கேள்வியெழுப்பியுள்ளாா். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அவா் தொடா்ச்சியாக பேசி வருகிறாா். அவரின் இந்த நடவடிக்கைகளை மாநிலத் தலைமை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாஜகவுக்கு மாறுவதற்காக கட்சிக்கு எதிராக பேசி வருவதாக ஊகிக்கப்படும் அதிருப்தி தலைவா் சுவேந்து அதிகாரியுடன் நல்லிணக்க முயற்சிகள் எதுவும் கிடையாது என்று தெளிவுபடுத்தியும் கூட அவருக்கு ஆதரவாக பாண்டா பேசி வருவது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

இதனால், திரிணமூல் காங்கிரஸின் கிழக்கு மிதுனபுரி மாவட்ட பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட கனிஷ்கா பாண்டா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கனிஷ்கா பாண்டா கூறுகையில், ‘ திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்கு விடாமுயற்சியுடன் அடிமட்டத்திலிருந்து இத்தனை ஆண்டுகள் உழைத்த என்னை அக்கட்சி தூக்கியெறிந்துள்ளது. நான் இன்னும் சுவேந்து அதிகாரியின் பக்கம் தான் உள்ளேன். மக்களுக்கான எங்களது சேவை தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com