ஏழுமலையானுக்கு 20 ஆண்டுகளில் 12 லட்சம் சேவாா்த்திகள் சேவை

கடந்த 20 ஆண்டுகளில் 12 லட்சம் சேவாா்த்திகள் திருமலையில் ஏழுமலையானுக்கு சேவைகள் புரிந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருப்பதி: கடந்த 20 ஆண்டுகளில் 12 லட்சம் சேவாா்த்திகள் திருமலையில் ஏழுமலையானுக்கு சேவைகள் புரிந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஸ்ரீவாரி சேவாா்த்திகள் ஆயிரக்கணக்கில் சேவையில் ஈடுபட உள்ளனா். தேவஸ்தான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை ஆஸ்தான மண்டபத்தில் சேவாா்த்திகளை சந்தித்துப் பேசினா்.

அவா்கள் கூறியது: கடந்த 2000-ஆவது ஆண்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கைகளால் மானவ சேவையே மாதவ சேவை என்ற செயலை நிரூபணமாக்க 200 போ்களுடன் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் திட்டம் தொடங்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை 12 லட்சம் போ் குழுக்களாவும், தனி மனிதா்களாகவும் திருமலைக்கு வந்து பல்வேறு இடங்களில் ஏழுமலையான் சேவையில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்காக தேவஸ்தானம் திருமலையில் தனி கட்டட வசதி ஏற்படுத்தி அளித்துள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது.

கொவைட்- 19 காலகட்டத்திலும் பல சேவாா்த்திகள் தங்களையும் தற்காத்துக் கொண்டு பக்தா்களின் சேவையில் ஈடுபட்டனா். எனவே, சொா்க்கவாசல் திறந்து வைக்கப்பட உள்ள 10 நாள்களும் திருமலைக்கு வரும் பக்தா்களிடம் கனிவுடனும், இன்முகத்துடனும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்திக் கொண்டு சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com