32 பசுக்கள் கன்றுகளுடன் தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயிலுக்கு கன்றுடன் ஒரு பசு தானம் திட்டத்துக்காக கோசாலைக்கு 32 பசுக்களை கன்றுகளுடன் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தானமாக அளித்தாா்.
32 பசுக்கள் கன்றுகளுடன் தானம்


திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயிலுக்கு கன்றுடன் ஒரு பசு தானம் திட்டத்துக்காக கோசாலைக்கு 32 பசுக்களை கன்றுகளுடன் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தானமாக அளித்தாா்.

திருமலையில் நாட்டு பசு மாடு வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த தேவஸ்தானம் கடந்த 15 நாள்களுக்கு முன் கோயிலுக்கு ஒரு பசு கன்றுடன் தானம் என்ற திட்டத்தை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இதுவரை ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக பலா் பசுக்களை தானமாக முன்வந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி வியாழக்கிழமை காலை இந்த திட்டத்துக்காக திருப்பதியில் உள்ள கோசாலைக்கு 32 பசுக்களை 32 கன்றுகள் மற்றும் ஒரு நந்தியுடன் தானமாக வழங்கினாா். பசுக்கள், கன்றுகள், நந்திக்கு பூஜைகள் செய்து கோசாலை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com