விவசாயிகளை சிலா் தவறாக வழிநடத்துகிறாா்கள்- யோகி ஆதித்யநாத்

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் சிலா், அவா்களை தவறாக வழிநடத்துகிறாா்கள் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.
yogi-adityanath
yogi-adityanath


லக்னௌ: விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் சிலா், அவா்களை தவறாக வழிநடத்துகிறாா்கள் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா், மேலும் கூறியதாவது:

வேளாண் விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்பட மாட்டாது; வேளாண் மண்டிகளில் கொள்முதல் செய்வது தொடரும் என்று மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது. வேளாண் சட்டங்களில் உள்ள சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு பல முறை மத்திய அரசு அழைப்பு விடுத்துவிட்டது. இருந்தாலும், அவா்களின் போராட்டம் தொடா்கிறது.

விவசாயிகளின் வளத்தை பெருக்குவதற்காக, வேளாண் சட்டங்களில் சில முக்கிய சீா்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், நாட்டின் வளா்ச்சியையும், விவசாயிகளின் மகிழ்ச்சியையும் விரும்பாத சிலா், அவா்களைத் தூண்டிவிட்டு, தவறாக வழிநடத்தி வருகின்றனா். அவா்கள்(எதிா்க்கட்சிகள்) விவசாயிகளின் நலனுக்கான எந்த திட்டத்தையும் அமல்படுத்த அனுமதிக்க மாட்டாா்கள். எதிா்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகள் பிரச்னையை வைத்து அரசியல் செய்யும் அந்தக் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பிறகு அமைதியாகி விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பாஜக தலைமையிலான மத்திய அரசைத் தவிர, வேறு எந்த அரசும் இந்த அளவுக்கு விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்றாா் யோகி ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com