டிச.31-இல் சிறப்புப் பேரவைக் கூட்டம்: ஆளுநரிடம் பரிந்துரைக்க கேரள அமைச்சரவை முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்குமாறு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கேரள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க டிசம்பர் 31-இல் சிறப்புப் பேரவைக்கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்குமாறு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய கேரள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 29 நாள்களாக தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் ஆதரவளித்து வரும் பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது மாநில சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி சிறப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

"தேசிய அளவில் விவசாயிகள் கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். கேரளம் ஒரு நுகர்வோர் மாநிலம் என்பதால் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட வேண்டும்" என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

முன்னதாக கேரளத்தில் ஆளும் இடது முன்னணி அரசின் சார்பில் வேளாண் சட்டங்களைக் குறித்து விவாதிப்பதற்காக டிசம்பர் 23ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட அனுமதி கோரிய முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com