கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது: ராகுல்

நாட்டில் கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. நிஜத்தில் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி


நாட்டில் கற்பனையில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. நிஜத்தில் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ''மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. வேளாண் சட்டங்களுக்கு முற்றிலும் எதிராக விவசாயிகள் நிற்பதை நாடு பார்த்துக்கொண்டுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீடு திரும்பமாட்டார்கள் என்பதை பிரதமருக்கு சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக எதிர்க்கட்சி துணை நிற்கும்'' என்று கூறினார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகை அருகே காங்கிரஸ் பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்தனர். பின்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க விடுவிக்கப்பட்டனர். பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்றா காங்கிரஸார் மட்டும் மந்திர் மார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com