கிறிஸ்துமஸ் பண்டிகை: குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை, நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிறிஸ்துமஸ் பண்டிகை, நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நமது நாட்டு  மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டவர்  இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதுதான், கிறிஸ்துமஸ். மனிதகுலம் ஞானம் பெற, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த இரக்கம்  மற்றும் மன்னிப்பின்  மீதான நமது நம்பிக்கையை இந்தப் பண்டிகை  மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றிணைந்து  பிரம்மாண்டமாகக் கொண்டாடும்  ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும். ஆனால், இந்த ஆண்டு, தற்போதுள்ள கோவிட் தொற்று காரணமாக, நாம் இந்தப் பண்டிகையை எளிமையாகக் கொண்டாட வேண்டும்.

உலக மக்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம். இந்தப் பண்டிகை, நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com