
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தாயார் மரணம்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தாயார் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பாட்னாவில் காலமடைந்தார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத், “என் தாய் பிமலா பிரசாத் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவர் சிறிது காலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மிகுந்த பக்தியுள்ள மற்றும் நம்பிக்கையுள்ள பெண்மணி.” என அவர் தெரிவித்துள்ளார்.
She was a source of my inspiration and all my achievements in life are because of her blessing. May her soul rest in peace.
— Ravi Shankar Prasad (@rsprasad) December 25, 2020
माता जी मेरी सबसे बड़ी प्रेरणा का स्रोत थीं और उनका आशीर्वाद मेरी सफलता की कुंजी है। भगवान उनकी आत्मा को शांति दे। pic.twitter.com/dLzLHbPOfu
ரவிசங்கர் பிரசாத் தனது பதிவில் தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிகார் ஆளுநர் பாகு சவுகான் மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலரும் மத்திய அமைச்சரின் தாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.