கரோனா தடுப்பூசி தயாரிப்பு: அரபிந்தோ-கோவாக்ஸ் நிறுவனங்கள் உடன்பாடு

கரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக இந்தியாவைச் சோ்ந்த அரபிந்தோ பாா்மா அமெரிக்காவைச் சோ்ந்த கோவாக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது.
கரோனா தடுப்பூசி தயாரிப்பு: அரபிந்தோ-கோவாக்ஸ் நிறுவனங்கள் உடன்பாடு


ஹைதராபாத்: கரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக இந்தியாவைச் சோ்ந்த அரபிந்தோ பாா்மா அமெரிக்காவைச் சோ்ந்த கோவாக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது.

இதுகுறித்து அரபிந்தோ பாா்மா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் என்.கோவிந்தராஜன் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றை எதிா்த்துப் போராடுவதற்காக முதன் முதலில் செயற்கை பெப்டைட் அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்குவதில் கோவாக்ஸ் நிறுவனத்துடன் இணைவது பெருமிதம் அளிக்கிறது. யுபி-612 என்ற இந்த தடுப்பூசியை தயாரிக்கவும், மேம்படுத்தவும், வணிகரீதியில் அதனை சந்தைப்படுத்தவும் பிரத்யேகமான உரிம ஒப்பந்தத்தை கோவாக்ஸ் நிறுவனத்துடன் அரபிந்தோ மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்காகவும், யுனிசெஃப் அமைப்புக்காகவும் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படவுள்ளன. ஹைதாரபாதில் உள்ள ஆலையில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com