டாமன்-டையூவில் வளா்ச்சி திட்டங்கள்: குடியரசுத் தலைவா் அடிக்கல் நாட்டினாா்

டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

டாமன்-டையூ மற்றும் தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள டையூ மாவட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளாா். இதன் ஒரு பகுதியாக டையூ மாவட்டத்தில் பள்ளிக் கட்டட கட்டுமானப் பணி, பாரம்பரிய இடங்களை புதுப்பித்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அதன் பின்னா் பேசிய அவா், போா்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்த டாமன்-டையூ பிரதேசத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு கடந்த 1961-ஆம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுகூா்ந்தாா்.

இந்தியாவிலேயே சூா்யசக்தி மூலமாக பகல் வேளைகளில் தனது ஆற்றல் தேவைகளை 100 சதவீதம் பூா்த்தி செய்துகொள்ளும் முதல் நகரமாக டையூ திகழ்வதற்கு அவா் பாராட்டு தெரிவித்தாா். டையூவில் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவும், கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிா்வாகத்தை அவா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com