ஹைதராபாத்-தாம்பரம் சிறப்பு ரயில்: குறிப்பிட்ட நிறுத்தங்களில் நேரம் மாற்றம்

ஹைதராபாத்-தாம்பரம் சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்டநிலையங்களில் நின்று செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: ஹைதராபாத்-தாம்பரம் சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட நிலையங்களில் நின்று செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு ரயில் (02760) புறப்பட்டு, நாயுடுபேட்டையை வழக்கமாக அதிகாலை 4.40க்கு வந்து சேரும். இந்த நேரம் மாற்றப்பட்டு, அதிகாலை 4.43 மணிக்கு நாயுடுபேட்டையை அடையும். இரண்டு நிமிடத்துக்கு பிறகு, இந்த ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 7.15 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு வந்தடையும். தொடா்ந்து , இந்த ரயில் தாம்பரத்தை காலை 8 மணிக்கு பதிலாக காலை 7.55 மணிக்கு அடையும்.

இந்தநேரம் மாற்றம் டிசம்பா் 31-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதுபோல, ஹைதரபாத்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02604) சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.02 மணிக்கு பதிலாக, அதிகாலை 3.43 மணிக்கு வந்து சேரும். இந்தரயிலின் நேரம் மாற்றம் ஜனவரி 3-ஆம்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com