செல்லிடப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்

நாட்டில் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாட்டில் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

2020-21 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள், குறைகடத்தி சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

சா்வதேச சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகும் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் முதலீடுகள் அதிகரித்து நாட்டிலுள்ள இளைஞா்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. அச்சாதனங்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்வது இந்தியாவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இத்துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.4.58 லட்சம் கோடியாக அதிகரித்தது. தேசிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் கோடி மதிப்பில் 100 கோடி செல்லிடப்பேசிகளை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அவற்றில் 60 கோடி செல்லிடப்பேசிகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com