மத்திய பட்ஜெட் 2020 - 21: துறைவாரியாக ஒரு பார்வை

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
மத்திய பட்ஜெட் 2020 - 21: துறைவாரியாக ஒரு பார்வை

வேளாண்துறை
 1. வேளாண்கடன்கள் இலக்கு-ரூ.15 லட்சம் கோடி.
 2. விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேயின் அரசு-தனியார் ஒத்துழைப்பில் "கிசான் ரயில்' திட்டம்.
 3. விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் "கிசான் உடான்' திட்டம்.
 4. சூரியசக்தியில் இயங்கும் பம்புகள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி.
 5. பால் பதப்படுத்துவதற்கான திறனை 2025-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குதல்.
 6. மீன் உற்பத்தியை 2022-23 நிதியாண்டுக்குள் 200 லட்சம் டன்னாக அதிகரித்தல்.
 7. 2024-25 நிதியாண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்தல்.
 8. கால்நடைகளில் கோமாரி உள்ளிட்ட நோய்களை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான திட்டம்.
 சுகாதாரத் துறை
 1. "ஆயுஷ்மான்' திட்டத்தின் கீழ் அரசு-தனியார் ஒத்துழைப்பில் மருத்துவமனைகள் தொடங்குதல்.
 2. 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கான திட்டம்.
 3. தொற்றா நோய்களை எதிர்கொள்ள "ஃபிட் இந்தியா' திட்டம்.
 4. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2024-ஆம் ஆண்டுக்குள் மலிவு விலை மக்கள் மருந்தகங்களை அமைத்தல்.
 5. நாடு முழுவதும் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.
 கல்வித்துறை
 1. புதிய கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
 2. உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்.
 3. திறன் மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 4. தேசிய காவல் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை.
 5. வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோருக்கான திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள்.
 6. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி.
 தொழில்துறை
 1. செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.
 2. ரூ.1,480 கோடி செலவில் தேசிய ஜவுளி தொழில்நுட்பத் திட்டம்.
 3. ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டை அதிகரிக்க "நிர்விக்' திட்டம்.
 4. ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரிகளை இணையவழியில் திரும்பப் பெறுவதற்கான வசதி.
 5. 2020, ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு எளிய வழிமுறை அமல்.
 கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை
 1. "உடான்' திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்படும்.
 2. 2023-ஆம் ஆண்டுக்குள் தில்லி-மும்பை விரைவுவழிச் சாலை.
 3. சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.
 4. முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.
 5. போக்குவரத்துத் துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு.
 6. அரசு-தனியார் ஒத்துழைப்பில் 150 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.
 7. தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை விரைவில் அறிமுகம்.
 8. தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படும்.
 9. வீடுகளில் 3 ஆண்டுக்குள் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை.
 நிதித்துறை
 1. வருமான வரி விகிதங்கள் குறைப்பு.
 2. 2020-21 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீதமாக அதிகரிப்பு.
 3. நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3.8 சதவீதமாக அதிகரிப்பு.
 4. ஆதார் எண் அடிப்படையில் நிரந்தரக் கணக்கு எண் (பான்) வழங்கப்படும்.
 5. வங்கி டெபாசிட்டுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
 6. ரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டும் "ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு.
 7. குறைந்த விலை வீட்டுக் கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு
 பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்
 1. பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருப்பதை அதிகரிக்க சிறப்பு ஆய்வுக் குழு.
 2. 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிதிறன்பேசிகள் வழங்குதல்.
 3. கருவுற்ற தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வழிகளை ஆராய சிறப்புக் குழு.
 கலாசாரம் மற்றும் சுற்றுலா
 1. தமிழகம் (ஆதிச்சநல்லூர்) உள்பட 5 மாநிலங்களில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த அருங்காட்சியகங்கள்.
 2. இந்தியப் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கப்படும்.
 3. நாணயம் சேகரித்தல், வர்த்தகம் தொடர்பான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
 4. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
 5. குஜராத்தின் லோத்தல் பகுதியில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com