மகாத்மா காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை: அனந்த்குமார் ஹெக்டே

மகாத்மா காந்தி குறித்த பேச்சால் சர்ச்சை எழுந்ததையடுத்து, தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை: அனந்த்குமார் ஹெக்டே


மகாத்மா காந்தி குறித்த பேச்சால் சர்ச்சை எழுந்ததையடுத்து, தான் காந்திக்கு எதிராக எதுவும் கூறவில்லை என பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் இன்று (செவ்வாய்கிழமை) பேசுகையில்,

"இதுதொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் தவறானது. தற்போது விவாதித்துக் கொண்டிருப்பது எதையும் நான் ஒருபோதும் கூறியதே இல்லை. இது அவசியமற்ற சர்ச்சை. பிப்ரவரி 1, 2020-இல் பெங்களூருவில் பேசியது என்னுடையக் கருத்துதான். எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்ல மகாத்மா காந்தியையோ அல்ல வேறுயாரையுமே நான் குறிப்பிடவில்லை. நான் சுதந்திரப் போராட்டத்தை வகைப்படுத்தவே முயற்சித்தேன்.

இதைச் சுற்றி நடைபெறும் விவாதங்கள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இல்லாத ஒன்றைப் பற்றி நான் என்ன கூறுவது? என்னுடையக் கருத்து பொதுத் தளத்தில் உள்ளது. யாருக்காவது அதைப் பார்க்க வேண்டும் என்றால் இணையதளத்திலும், என்னுடைய வலைத்தளத்திலும் உள்ளது. மகாத்மா காந்தி, நேரு மற்றும் மற்ற சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு எதிராக நான் ஏதேனும் கூறியிருந்தால் அதைக் காட்டுங்கள்.

சாவர்க்கர் குறித்த நிகழ்ச்சி அது. நமது அனைத்து சுதந்திரப் போராட்டக்காரர்களுக்குமான உரிய மரியாதையுடன், சுதந்திரப் போராட்டம் குறித்து பேசினேன். அதில் சுதந்திரப் போராட்டம் அல்லது சுதந்திரப் போராட்டக்காரர்கள் குறித்து எந்தவித குழப்பமோ, தரக்குறைவான கருத்தோ இல்லை. தேவையில்லாத தொந்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

முன்னதாக, வி.டி. சாவர்க்கர் நினைவைப் போற்றும் வகையில், கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனந்த்குமார் ஹெக்டே, மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை நாடகம் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டு பேசினார். இவருடைய இந்தக் கருத்து மிகப் பெரிய சர்ச்சையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com