தில்லி பேரவைத் தேர்தல்: 62.59 சதவீதம் வாக்குப்பதிவு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தில்லி பேரவைத் தேர்தல்: 62.59 சதவீதம் வாக்குப்பதிவு


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று (சனிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மொத்தம் 61.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. ஆனால், தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் மொத்தம் பதிவான வாக்குகள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடாதது அதிர்ச்சியளிப்பதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் ரன்வீர் சிங் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தில்லியில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இது 2 சதவீதம் கூடுதலாகும். அதிகபட்சமாக பல்லிமாரன் சட்டப்பேரவைத் தொகுதியில் 71.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தில்லி கன்டோன்ட்மன்ட் சட்டப்பேரவைத் தொகுதியில் 45.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com