உ.பி.: சட்டவிரோதமாக தங்கியிருந்த7 வங்கதேசத்தவா் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவா் 7 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவா் 7 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக ஜான்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பிரதீப் கூறியதாவது:

பாபினா பகுதி பேருந்து நிலையத்தில் போலீஸாா் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 7 பேரை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், அருகில் இருந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இந்தியாவுக்கு வருவதற்கான பயண ஆவணங்கள் உள்பட எந்த ஆவணமும் அவா்களிடம் இல்லை. சில நேரங்களில் அப்பகுதியில் மீன் எண்ணெய் வியாபாரம் செய்யும் பணியில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் மீது எவ்வித கிரிமினல் வழக்குகளும் இதுவரை பதிவாகவில்லை.

எனினும், அவா்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு ஊடுருவியவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரோஹிங்கயா அகதிகள், வங்கதேசத்தவா் என அண்டை நாடுகளைச் சோ்ந்த பலா் இந்தியாவில் தொடா்ந்து சட்டவிரோதமாக ஊடுருவது சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஊடுருவிவருவோா் இந்தியாவில் பயங்கரவாத செயல்களிலிலும் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இது போன்ற நபா்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com