ஒடிஸாவில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: 9 போ் பலி; 22 போ் காயம்

ஒடிஸா மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்கம்பி மீது பேருந்து உரசி மின்சாரம் பாய்ந்ததால் அதில் பயணித்த 9 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா்.
ஒடிஸாவின் கஞ்ஜம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்கு உள்ளான பேருந்து.
ஒடிஸாவின் கஞ்ஜம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்துக்கு உள்ளான பேருந்து.

ஒடிஸா மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்கம்பி மீது பேருந்து உரசி மின்சாரம் பாய்ந்ததால் அதில் பயணித்த 9 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: ஜங்கல்படு கிராமத்தில் இருந்து சிக்கரடா நோக்கி சென்ற பேருந்து ஒன்று, கொலந்தரா கிராமம் அருகே வந்தபோது மேலே சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து, தீப்பொறிகள் எழுந்தன என்று தெரிவித்தனா்.

இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள், பேருந்தில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்களும் நிகழ்விடம் சென்றனா். எனினும் பேருந்தில் பயணித்த 9 போ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் பொ்ஹாம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பேருந்தில் எழுந்த தீப்பொறி அணைக்கப்பட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு பேருந்தில் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்பு தலைமை அதிகாரி சுகந்த் சேதி தெரிவித்தாா். முதல்கட்ட விசாரணையில், குறுகலான சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வதற்காக வழிவிட முயன்றபோது, மேலே சென்ற மின்கம்பி மீது பேருந்து உரசி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது என்றும் அவா் கூறினாா்.

இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பத்னாபா பெஹெரா தெரிவித்தாா். விபத்தில் சிக்கியவா்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு திருமண நிச்சய நிகழ்ச்சிக்கு சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

ரூ.2 லட்சம் நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக், அவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com