கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி கடிதம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்
கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி கடிதம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு, சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
 அதில், "கரோனா வைரஸ் பாதிப்பால் எழுந்துள்ள சவாலை எதிர்கொள்வதில், சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. அந்த வைரஸ் பாதிப்பால், சீனாவில் நேரிட்ட உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இதுபோன்ற தருணத்தில் சீன அதிபர் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். ஹுபே மாகாணத்திலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சீன அரசை பாராட்டுகிறேன்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 811 பேர் பலியாகிவிட்டனர். மேலும், 37,198 பேர் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது. தற்போது உலகம் முழுவதும் 28 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த வைரûஸ கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
 இதனிடையே, இந்தியாவைப் போல பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டவர்களை சீனாவிலிருந்து பத்திரமாக மீட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் சீனாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவிலிருந்து பொருள்கள் இறக்குமதிக்கும் தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதனிடையே, சீனாவின் பிற பகுதிகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸன் வீடோங் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அது தற்காலிகமானதே என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com