செயில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையைச் சோ்ந்த உயரதிகாரி கூறியதாவது:

ஓஎஃப்எஸ் (ஆஃபா் ஃபாா் சேல்) வழிமுறை வாயிலாக செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போதுள்ள விலை அடிப்படையில் செயில் பங்குகளை விற்பதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1,000 கோடி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த பங்கு வெளியீட்டை விளம்பரப்படுத்துவதின் மூலமாக அதற்கான முதலீட்டாளா்களின் ஆா்வத்தை அறிந்து கொள்ள உள்ளோம்.

செயில் பங்கு விற்பனை குறித்து சிங்கப்பூா் மற்றும் ஹாங்காங் நாடுகளில் விளம்பரங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த உருக்கு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், கரோனா வைரஸ் பாதிப்பால் ஹாங்காங்கில் மட்டும் செயில் நிறுவன பங்கு வெளியீட்டுக்கான விளம்பரங்களை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதன் வாயிலாக ரூ.65,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இருப்பினும் சந்தை நிலவரம் சரியில்லாத காரணத்தால் இதுவரையில் ரூ.34,000 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் மாா்ச் மாத இறுதிக்குள் எஞ்சியுள்ள ரூ.31,000 கோடியை திரட்ட வேண்டிய தேவை மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. எனவே, செயில் நிறுவன பங்கு வெளியீட்டு நடப்பு நிதியாண்டுக்குள் முடிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய அரசு அண்மையில் சமா்ப்பித்த வரும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பங்கு விலக்கல் மூலமாக ரூ.1.20 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிா்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com