பயங்கரவாதி அப்ஃசல் குரு தூக்கிலிடப்பட்ட தினம்: காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளியான அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை (பிப். 9) முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இணைய சேவை
பயங்கரவாதி அப்ஃசல் குரு தூக்கிலிடப்பட்ட தினம்: காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளியான அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை (பிப். 9) முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இணைய சேவை வசதி ஞாயிற்றுக்கிழமை தூண்டிக்கப்பட்டது.

கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதி அஃப்சல் குரு, தில்லி திஹாா் சிறையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டாா். அவரது உடல், சிறை வளாகத்தில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில்அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை முன்னிட்டு முழு அடைப்பு போராட்டம் நடத்த ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் அழைத்து விடுத்தன. இதையடுத்து, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வீண் வதந்திகளை பரப்புவது, பொதுமக்களைத் திரட்டி வன்முறையைத் தூண்டுவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே இணைய சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு மாலையில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது.

முன்னதாக, முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த தடை செய்யப்பட்ட இயக்கமான ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்த அமைப்பு வெளியிட்ட பத்திரிகை செய்தியை வெளியிட்ட இரு செய்தியாளா்களுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனா். அவா்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அஃப்சல் குரு பிறந்த இடமான பாரமுல்லா மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலத்தில் பெரிய அளவில் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. அதே நேரத்தில் பல இடங்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் செயல்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் போக்குவரத்தும் குறைவாக இருந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் இணைய சேவையும் முடக்கப்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதிதான் அங்கு 2ஜி இணையதள சேவை மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com