தில்லி பேரவைத் தேர்தல் தோல்விக்கு தலைவர்களின் வெறுப்புப் பேச்சே காரணம்: அமித் ஷா

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சே, கட்சிக்கு தோல்வியை அளித்துள்ளது என பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லி பேரவைத் தேர்தல் தோல்விக்கு தலைவர்களின் வெறுப்புப் பேச்சே காரணம்: அமித் ஷா


தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சே, கட்சிக்கு தோல்வியை அளித்துள்ளது என பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 70 இடங்களில் வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முடிவுகள் வெளியாகி இருதினங்கள் ஆகிய நிலையில் பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில்,

"வெறும் வெற்றி தோல்விக்காக பாஜக தேர்தலை எதிர்கொள்ளாது. தேர்தல் மூலம் சித்தாந்தத்தை விரிவுபடுத்துவதிலேயே பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. 'துப்பாக்கியால் சுடு' மற்றும் 'இந்தியா-பாகிஸ்தான் ஒப்பீடு' போன்ற கருத்துகளைத் தவிர்த்திருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளை பாஜக ஆதரிக்கவில்லை. தில்லி தேர்தலில் என்னுடைய மதிப்பீடு தவறாகியுள்ளது. 45 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்தேன். அதேசமயம், இந்தத் தேர்தல் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கான தீர்ப்பும் அல்ல.

சிஏஏ குறித்து ஏதேனும் விவாதிக்க வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகத்தை அணுகலாம். மூன்றே நாட்களில் அதற்கான நேரம் ஒதுக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com