கேஜரிவால் பதவியேற்பு நிகழ்ச்சி: தில்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு

கேஜரிவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் தில்லி மக்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். 
கேஜரிவால் பதவியேற்பு நிகழ்ச்சி: தில்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு

கேஜரிவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் தில்லி மக்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். 

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜகவுக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸுக்கு கடந்த தேர்தலைப் போலவே ஓரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

முன்னதாக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் சிவில் லைன்ஸ் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கேஜரிவால் சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை நேரில் கேஜரிவால் சந்தித்துப் பேசினார்.

ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக பதிவியேற்கிறார். அவருடன் அமைச்சா்களும் பதவியேற்க உள்ளனா். இந்நிகழ்ச்சியில் பிற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாருக்கும் அழைப்பில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால்ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோபால்ராய் கூறுகையில், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தில்லி மக்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். அதேசமயம் பிற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் அழைக்கப்படமாட்டார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com