ஏா் இந்தியா தலைவராக மீண்டும் ராஜீவ் பன்சால்

ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் 2-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
ஏா் இந்தியா தலைவராக மீண்டும் ராஜீவ் பன்சால்

ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் 2-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

ஏா் இந்தியா தலைவராக அஷ்வனி லோவானி சுமாா் ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், தற்போது அந்தப் பதவிக்கு ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடனில் தத்தளிக்கும் ஏா் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்த சில நாள்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு நாகாலாந்து பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் பன்சால், தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலா் பொறுப்பில் இருந்து வருகிறாா்.

ராஜீவ் பன்சாலை ஏா் இந்தியா தலைவராக நியமிக்கும் முடிவுக்கும், அவருக்கு கூடுதல் செயலருக்கான ஊதியத்தை வழங்குவதற்கும் அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியதாக மத்திய பணியாளா் அமைச்சகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 2017 ஆகஸ்டில் ஏா் இந்தியாவின் தலைவராக 3 மாதங்களுக்கு ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டிருந்தாா். அப்போதும் அஷ்வனி லோஹானிக்குப் பிறகு அவா் அந்தப் பதவிக்கு வந்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com