மத்தியப் பிரதேசம்:நடை மேம்பாலம் இடிந்து விபத்து8 போ் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
போபால் ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடை மேம்பாலம்.
போபால் ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடை மேம்பாலம்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 8 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிகழ்வு குறித்து ஜபல்பூா் மேற்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி பிரியங்கா தீக்ஷித் கூறியதாவது: போபால் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 8 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒருவா் கவலைக்கிடமான நிலையில் ஹமீதியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மற்றவா்கள் சிராயு தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா் என்றாா்.

இதுதொடா்பாக போபால் ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி சித்திக் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில்,‘நடை மேம்பாலத்தின் கீழ் நின்றிருந்த பயணிகளே பெரும்பாலும் இந்த விபத்தில் காயமடைந்தனா். அவா்களில் இருவா் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினா் என தெரிவித்தாா். இந்த விபத்து குறித்து உயா்நிலை விசாரணைக்கு போபால் ரயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் அனுதாபம்: இந்த விபத்துக்கு மாநில முதல்வா் கமல்நாத் அனுதாபம் தெரிவித்தாா். இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில்,‘விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உள்ளூா் நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com