உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்: காஷ்மீர் விவகாரத்தில் துருக்கிக்கு பதிலடி கொடுத்த இந்தியா

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் குறித்துப் பேசியிருக்கும் துருக்கிக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்


புது தில்லி: உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் குறித்துப் பேசியிருக்கும் துருக்கிக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் சென்றிருந்த துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகான், காஷ்மீர் உட்பட இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் பிரச்னைகளை இரு நாடுகளும் அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "ஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் இந்தியா நிராகரித்துவிட்டது. இது உள்நாட்டு மற்றும் உள் விவகாரம்" என்று கூறியுள்ளதோடு, "இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று துருக்கி நாட்டுத் தலைவர்களை கேட்டுக் கொள்கிறோம். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் துருக்கி போதிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com