எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ஒருவா் பலி; 4 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய கிராமப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய கிராமப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பூஞ்ச் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் ஷாபூா் மற்றும் கொ்னி ஆகிய எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதற்கு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து நடத்திய தாக்குதலில் கிராமவாசி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com