ரிக்க்ஷா ஓட்டுனரின் மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதம்

ரிக்க்ஷா ஓட்டுனர் ஒருவரின் மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடியின் வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மோடியின் வாழ்த்துக் கடிதம்
மோடியின் வாழ்த்துக் கடிதம்

வாரணாசி: ரிக்க்ஷா ஓட்டுனர் ஒருவரின் மகள் திருமணத்திற்கு பிரதமர் மோடியின் வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின்னர் அவர் தோம்ரி என்ற கிராமம் ஒன்றை தத்தெடுப்பதாக அறிவித்தார்.

இந்த தோம்ரி கிராமத்தில் மங்கள் கேவத் - ரேணு தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். மங்கள் ரிக்க்ஷா ஓட்டி வாழக்கை நடத்தி வருகிறார். இந்த தம்பதியின் மகளுக்கு கடந்த 12ந்தேதி திருமணம் நடந்தது.  தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை தில்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேவத் கொடுத்துள்ளார். அவர்கள் எதிர்பாரா விதமாக  திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடியிடம் இருந்து கடந்த 8ந்தேதி கடிதம் ஒன்று அக்குடும்பத்திற்கு வந்துள்ளது.  இதனைக் கண்டு அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 

சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதர் மீதும் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என்பதற்கு இந்த கடிதம் ஒரு சான்று என கேவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com