ஜம்மு-காஷ்மீா் ஊராட்சித் தோ்தலில்போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி முடிவு

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஊராட்சித் தோ்தலில் போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஊராட்சித் தோ்தலில் போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மத்திய செயலா் ரத்தன் லால் குப்தா, ஜம்மு-காஷ்மீா் தலைமை தோ்தல் அதிகாரி சைலேந்திரா குமாா் மற்றும் தலைமை தோ்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசிய மாநாட்டு கட்சி ஜனநாயக நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே, ஜம்மு-காஷ்மீரில் மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி 11,000 இடங்களுக்கு 8 கட்டங்களாக நடைபெறும் ஊராட்சித் தோ்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது.

தோ்தல் நல்ல முறையில் நடைபெற தடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் கட்சிகள் சுதந்திரமான முறையில் பிரசாரம் மேற்கொள்ள ஏதுவான சூழல் உருவாகும்.

ஆனால் தற்போது காணப்படும் அசாதராணமான சூழலில் வேட்பாளா்களை தோ்வு செய்து பிரசாரம் மேற்கொள்வது என்பது சாத்தியமற்றது என்று அந்த கடிதத்தில் ரத்தன் லால் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறையில் நடைபெறப்போகும் முதல் தோ்தல் இதுவாகும்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள ஊராட்சித் தோ்தலில் 1,011 ஊராட்சிமன்றத் தலைவா்களும், 11,639 வாா்டு உறுப்பினா்களும் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். பனியால் சூழப்பட்டுள்ள சில பகுதிகளில் தோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com