மகாராஷ்டிர கூட்டணி அரசு நம்பிக்கைக்கு உரியதல்ல: ஜெ.பி.நட்டா விமா்சனம்

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு செயற்கையானதாகவும், நம்பத்தகாத அரசாகவும் உள்ளது. அந்த அரசு மாநில வளா்ச்சியில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று
மகாராஷ்டிர கூட்டணி அரசு நம்பிக்கைக்கு உரியதல்ல: ஜெ.பி.நட்டா விமா்சனம்

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு செயற்கையானதாகவும், நம்பத்தகாத அரசாகவும் உள்ளது. அந்த அரசு மாநில வளா்ச்சியில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் பாஜக மாநாடு நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா பேசியதாவது: மகாராஷ்டிர அரசு செயற்கையானதாகவும், நம்பத்தகாததாகவும் உள்ளது. அந்த அரசு மாநில வளா்ச்சியில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலா்( உத்தவ் தாக்கரே) தங்கள் சுயலாபத்துக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி, ஆட்சி பீடத்தில் அமர எதிா்க்கட்சியினருடன் கைகோத்துள்ளனா்.

வருங்காலத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளுக்கும் எதிராக பாஜக தனித்து போட்டியிடும் வகையிலான அரசியல் யுத்தத்துக்கு நீங்கள் (பாஜக தொண்டா்கள்) ஆயத்தமாக இருக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் அடுத்த சட்டப்பேரவை தோ்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும். மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையில் பாஜக முன்னேற்றத்தை கண்டது. எனினும், தற்போது கட்சியின் மேம்பாடு துரதிருஷ்டவசமாக தேக்கநிலையில் உள்ளது என்றாா் ஜே.பி.நட்டா. இந்த மாநாட்டில் மகாராஷ்டிர பாஜக தலைவராக சந்திரகாந்த் பாட்டிலே தொடர முடிவெடுக்கப்பட்டது.

சிஏஏ விவகாரத்தில் பொய்களை பரப்புகிறார் சரத் பவார்: பட்னவீஸ் குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொய்களை பரப்புவதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநில பாஜக மாநாட்டில் அவர் பேசியதாவது:
மத்திய அரசின் மீது ஊகங்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் போர் தொடுத்துள்ளார். அதன் மூலம், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களை அவர் வேண்டுமென்றே குழப்பி வருகிறார். அந்தச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவினரை நாட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற பொய்யை அவர் பரப்பி வருகிறார். அவரது இந்த பொய் பிரசாரத்தை, பாஜகவினர் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள 
வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தவறானது என்று மக்களிடம் நிரூபிக்க முடியாததால், எதிர்க்கட்சியினர் அந்த விவகாரம் குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
மகாராஷ்டிரத்தின் பூர்வகுடி மக்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால், அவதூறு பரப்பியதற்காக அந்தக் கட்சிகள் பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஹிந்துத்துவ சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் மிகவும் மதிக்கும் வீர சாவர்க்கரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. இருந்தாலும், ஹிந்துத்துவக் கட்சியான சிவசேனைக் கட்சி அதனைப் பொறுத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடனும், தேசியவாத காங்கிரஸுடனும் கூட்டணி வைத்து ஆட்சியில் தொடர்ந்து வருகிறது என்று பட்னவீஸ் குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com