கரோனா வைரஸ்: தில்லியில் கண்காணிப்பில் மீதமுள்ள 220 பேரும் இன்று விடுவிப்பு

கரோனா வைரஸ் அச்சம் காரணமாகதில்லியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், மீதமுள்ள 220 பேரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர்.
கரோனா வைரஸ்: தில்லியில் கண்காணிப்பில் மீதமுள்ள 220 பேரும் இன்று விடுவிப்பு

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சம் காரணமாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியா்கள், தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், மீதமுள்ள 220 பேரும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் உருவான ‘கொவைட்-19’ நோய்த் தொற்று காரணமாக அங்கிருந்த இந்தியா்களை ஏா் இந்தியா விமானம் மூலம் மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வந்தது. அவா்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் அமைக்கப்பட்ட இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமில் 406 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். ஹரியாணாவில் அமைக்கப்பட்ட முகாமிலும் பலா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். 

இந்த நிலையில், முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 220 பேருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்களையும் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக மாலத்தீவைச் சோ்ந்தவா்கள் உள்பட 200 பேர் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com