ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதி: முற்றுப்புள்ளி வைத்த கூகுள்

இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.    
இலவச வைஃபை வசதி
இலவச வைஃபை வசதி

புது தில்லி: இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.    

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான  கூகுள், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயின் தொழில்நுட்பப் பிரிவான ரயில்டெல்லுடன் 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி இந்தியா முழுவதும் அமைந்துள்ள 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை கூகுள் உதவியுடன் மேற்கொள்வது என்று திட்டமிடப்பட்டது. அதனபடி இந்த திட்டமானது தற்போதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.    

இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சீசர் சென்குப்தா திங்களன்று நிறுவன வலைப்பூ ஒன்றில் பதிவிட்டுள்ளதாவது:

உலக அளவில் தற்போது மொபைல் டேட்டாவின் விலை ஒரு ஜிபிக்கு குறைவாக கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல டேட்டாவை பயன்படுத்துவதும் மிகவும் எளிதாகி விட்டது. அதேபோல இந்தியாவில்  ஒரு மாதத்திற்கு ஒருவர் சராசரியாக 10 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர் என்பது ‘டிராய் ‘நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே தற்போது இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்ள உள்ளோம். இந்தியாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் இலவச வைஃபை அளித்து வந்தோம். தற்போது அத்தனையும் படிப்படியாக நிறுத்திக் கொள்ள உள்ளோம்,.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறிப்பிட்ட 400 ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட 5600 ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதி தொடர்ந்து வழங்கப்படும் என்று ரயில்டெல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com