கொட்டுரேஸ்வராசுவாமி கோயில் திருவிழா: தாவணகெரே-ஹொசபேட்டை இடையே சிறப்பு ரயில்

கோட்டூரேஸ்வராசுவாமி திருக்கோயில் திருவிழாவையொட்டி தாவணகெரே, ஹொசபேட்டை இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
கொட்டுரேஸ்வராசுவாமி கோயில் திருவிழா: தாவணகெரே-ஹொசபேட்டை இடையே சிறப்பு ரயில்

கோட்டூரேஸ்வராசுவாமி திருக்கோயில் திருவிழாவையொட்டி தாவணகெரே, ஹொசபேட்டை இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோட்டூரேஸ்வராசுவாமி திருக்கோயில் திருவிழாவையொட்டி தாவணகெரேயிலிருந்து ஹொசபேட்டை ரயில் நிலையத்திற்கு பிப். 19 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்-06231-தாவணகெரே-ஹொசபேட்டை பயணிகள் சிறப்பு ரயில் சேவை பிப். 19 ஆம் தேதி தாவணகெரே ரயில்நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஹொசபேட்டை ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடையும்.

அதேபோல, மறுமாா்க்கத்தில் ரயில் எண்-06232-ஹொசபேட்டை-தாவணகெரே பயணிகள் சிறப்பு ரயில் பிற்பகல் 3.30 மணிக்கு ஹொசப்பேட்டையில் ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு தாவணகெரே ரயில் நிலையத்திற்கு இரவு 8.40 மணிக்கு வந்தடையும்.

இரு மாா்க்கங்களிலும் துங்கபத்ரா அணை, வைஷ்யங்கரி, வைஷ்யாகாலனி, மாரியம்மனஹள்ளி, ஹம்பாபட்டணம், ஹகரி பொம்மனஹள்ளி, கொத்தூா், பென்னஹள்ளி, ஹரப்பனஹள்ளி, தெல்கி, அமராவதி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 10 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com