கேரள மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ்.மணி காலமானார்

கேரளாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்களில் ஒருவரும், கலா கவுமுதி நாளிதழின் தலைமை ஆசிரியருமான எம்.எஸ்.மணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79. 
கேரள மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ்.மணி காலமானார்

கேரளாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், கலா கவுமுதி நாளிதழின் தலைமை ஆசிரியருமான எம்.எஸ்.மணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79. 

கலா கவுமுதி எனும் நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் எம்.எஸ்.மணி. இவர் நவம்பர் 4, 1941 அன்று கொல்லத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் கே. சுகுமாரன் - மாதவி சுகுமாரன். மலையாள இலக்கியம் மற்றும் பத்திரிகையாளரான மறைந்த சி.வி.குஞ்சி ராமனின் பேரன் ஆவார்.

பி.எஸ்சி படித்தபோது மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1961ம் ஆண்டில் கேரள கவுமுதியில் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தில்லி நாடாளுமன்ற நிருபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1965ல் தந்தையுடன் இணைந்து கேரள கவுமுதியின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், அகில இந்திய செய்தித்தாள் தொகுப்பாளர்கள் மாநாட்டின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அம்பேத்கர் மற்றும் கேசரி விருதுகளைப் பெற்றவர்.

குமாரபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை(பிப்ரவரி 18) காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

'அவரது மறைவு பத்திரிகைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. பத்திரிகை உலகில் அவர் செய்த பங்களிப்பு எப்போதுமே பாராட்டப்படும். மேலும் திறமைமிக்க ஒரு பத்திரிகையாளர் குழுவைக் கட்டமைத்த பெருமை அவருக்கு உண்டு' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com