இந்திய வருகையின்போது பள்ளி செல்ல விரும்பும் மெலனியா டிரம்ப்

இந்திய வருகையின்போது தில்லியில் உள்ள பள்ளிக்குச் சென்று மகிழ்ச்சியான வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலனியா டிரம்ப் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வருகையின்போது பள்ளி செல்ல விரும்பும் மெலனியா டிரம்ப்


புது தில்லி: இந்திய வருகையின்போது தில்லியில் உள்ள பள்ளிக்குச் சென்று மகிழ்ச்சியான வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலனியா டிரம்ப் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா தம்பதியினர், பயணத்தின் இரண்டாவது நாளன்று தெற்கு தில்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் சென்று  வகுப்பறைகளைப் பார்வையிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, சில மணி நேரங்கள் பள்ளிச் சிறார்களுடன் பேசி பொழுதைக் கழிக்கவும் மெலனியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.

தில்லி வரும் மெலனியா டிரம்பை, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சந்திப்பு நிகழும் போது, மெலனியா டிரம்ப் தனியாக தில்லி பள்ளிக்கு வருகை தருவார் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com