ராஜஸ்தானில் 2 தலித்துகள் மீது கொடூரத் தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ராகுல் டிவீட்

ராஜஸ்தானில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், குற்றம் இழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தானில் 2 தலித்துகள் மீது கொடூரத் தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ராகுல் டிவீட்


ராஜஸ்தானில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், குற்றம் இழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் இரண்டு தலித்துகள் இருசக்கர வாகன நிறுவனத்தில் இருந்து பணம் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டனர். இதையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களால் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடியோ வைரலான பிறகே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பன்சோடி காவல் நிலையத் தலைவர் ராஜ்பால் சிங் தெரிவிக்கையில், 

"கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு நபர்கள் பணம் திருடியதாகப் பிடிபட்டிருக்கின்றனர். இதையடுத்து, ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்களால் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புதன்கிழமையன்று புகார் அளித்தனர். இதன்பிறகு, அந்த விடியோ வைரலானது.

அதேசமயம் ஷோரூம் ஊழியர்களும், பணம் திருடிய குற்றச்சாட்டுக்காக இரண்டு தலித்துகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கையில்,

"அதிர்ச்சியளிக்கக் கூடிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com