ஒவைஸி மேடையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்: பாதியில் நிறுத்தி ஒவைஸி கண்டனம் (விடியோ)

பெங்களூருவில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி பங்கேற்ற பேரணியில் பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.
ஒவைஸி மேடையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்: பாதியில் நிறுத்தி  ஒவைஸி கண்டனம் (விடியோ)


பெங்களூருவில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி பங்கேற்ற பேரணியில் பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கத்தை எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.

பெங்களூருவில் அரசியலமைப்பைக் காப்போம் என்ற தலைப்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், அசாதுதீன் ஒவைஸிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒவைஸி மேடை ஏறியதும் பெண் ஒருவர் மைக்கில் 'பாகிஸ்தான் வாழ்க' என்ற முழக்கத்தை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதனால், மேடையில் இருந்த ஒவைஸி செய்வதறியாத திகைத்து அந்தப் பெண்ணின் கையில் இருந்த மைக்கை வாங்க முயற்சித்தார்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும் அந்தப் பெண்ணை பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்தினர். இருப்பினும், அந்தப் பெண் விடாது தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிக் கொண்டே இருந்தார்.

இதையடுத்து, காவல் துறையினர் மேடையேறி அவரை கீழே இறக்கினர். 

இதன்பிறகு பேசிய ஒவைஸி, "அந்தப் பெண்ணுக்கும் எனக்கோ அல்லது என்னுடையக் கட்சிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவரை இங்கு அழைத்திருக்கக் கூடாது. இது தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com