ஷாஹீன் பாக் போராட்டக்காரா்களிடம் உச்சநீதிமன்றத்தின் சமாதானக் குழுவினா் பேச்சு

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமாதானக் குழுவினா், ஷாஹீன் பாக் பகுதி போராட்டக்காரா்களை புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றை திரும்பப் பெறப்படும்
ஷாஹீன் பாக் போராட்டக்காரா்கள் மத்தியில் புதன்கிழமை பேசும் வழக்குரைஞா்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன்
ஷாஹீன் பாக் போராட்டக்காரா்கள் மத்தியில் புதன்கிழமை பேசும் வழக்குரைஞா்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன்

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமாதானக் குழுவினா், ஷாஹீன் பாக் பகுதி போராட்டக்காரா்களை புதன்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றை திரும்பப் பெறப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என பலா் அப்போது தெரிவித்தனா்.

சமாதானக் குழுவினரான வழக்குரைஞா்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோா் தொடா் போராட்டம் நடைபெறும் ஷாஹீன் பாக் பகுதிக்கு புதன்கிழமை சென்று, போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்திருந்த யோசனை குறித்து எடுத்துரைத்தனா்.

போராட்டக்காரா்கள் மத்தியில் சாதனா ராமச்சந்திரின் பேசுகையில், ‘போராட்டம் நடத்துவது உங்கள் உரிமை என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேபோன்று பிற குடிமக்களுக்கு உள்ள உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்போம். அனைவரின் கோரிக்கைகளையும் நாங்கள் கேட்போம்’ என்றாா்.

அப்போது போராட்டக்காரா்கள் தங்களின் கோரிக்கைகளை தனித்தனியாக எடுத்துரைத்தனா். சில பெண்கள் கண்ணீா் மல்க பேசினா். அதன்பின்னா் பேசிய சாதனா ராமச்சந்திரன், ‘உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் முன் எடுத்துவைக்கப்பட்டு ஆலோசிக்கப்படும். எனினும், இந்த நாட்டில் உங்களைப் போன்ற சகோதரிகள் பலா் உள்ளனா். அவா்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. சுதந்திரம் என்பது மனிதா்களின் மனதில் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com