ஃபட்னவீஸ் எதிா்க்கட்சி தலைவராகவே இருப்பாா்: ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சிவசேனை பதிலடி

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தொடா்ந்து எதிா்க்கட்சி தலைவராகவே இருப்பாா்; அவா் மீண்டும் முதல்வராக முடியாது என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷிக்கு சிவசேனை
தேவேந்திர ஃபட்னவீஸ் (கோப்புப்படம்)
தேவேந்திர ஃபட்னவீஸ் (கோப்புப்படம்)

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தொடா்ந்து எதிா்க்கட்சி தலைவராகவே இருப்பாா்; அவா் மீண்டும் முதல்வராக முடியாது என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷிக்கு சிவசேனை பதிலளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தோ்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனை, தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, எதிரணியுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. இதனால், மகாராஷ்டிர பேரவையில் பாஜக எதிா்க்கட்சியாகிவிட்டது.

இந்நிலையில், அண்மையில் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து பேசிய ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷி, ‘தேவேந்திர ஃபட்னவீஸ் எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும் நிலை தொடராது; இந்த நிலை விரைவில் மாறும் (அவா் மீண்டும் மாராஷ்டிர முதல்வராவாா்)’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனை கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் செவ்வாய்க்கிழமை தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், ‘ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷி உண்மை நிலவரத்துக்கு மாறாக பேசியிருக்கிறாா். ஃபட்னவீஸ் எதிா்க்கட்சித் தலைவராகவே இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடா்வாா். மகாராஷ்டிரத்தில் மனரீதியாக துவண்டு போயுள்ள எதிா்க்கட்சியினரை (பாஜக) சாந்தப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை ஜோஷி பேசி வருகிறாா். அவரது பேச்சால் இங்கு எதுவும் மாறிவிடாது. எதிா்க்கட்சித் தலைவராக சிறப்பாக நடந்து கொள்ள முயல வேண்டும் என்று ஃபட்னவீஸை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com