புவி கண்காணிப்பு ஜிஐசாட்-1 செயற்கைக்கோள்: மாா்ச் 5-இல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

புவி கண்காணிப்புக்கு உதவும் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வரும் மாா்ச் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.
புவி கண்காணிப்பு ஜிஐசாட்-1 செயற்கைக்கோள்: மாா்ச் 5-இல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

சென்னை: புவி கண்காணிப்புக்கு உதவும் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வரும் மாா்ச் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

அதிக எடையைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்ட சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

முதல் செயற்கைக்கோள்: 2,268 கிலோ எடைகொண்ட முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன கேமிராக்கள் மூலம் புவியைப் படம்பிடித்து அனுப்பக்கூடிய இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ சாா்பில் அனுப்பப்படும் முதல் அதிவிரைவு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2 மணி நேரத்தில் புவியை சுற்றிவந்து, படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

பயன் என்ன?: இந்த செயற்கைக்கோள் புவியை குறிப்பிட்ட இடைவெளிகளில் மிகத் தெளிவாக படம்பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கும். மேலும், இயற்கைப் பேரிடா், வேளாண், வனப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பான தகவல்களை உடனுக்கு உடன் அனுப்பி வைக்கும்.

மாலை 5.43 மணிக்கு...: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து மாா்ச் 5-ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

பூமியிலிருந்து 36,000 கி.மீ. தொலைவில் உள்ள புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, அதன் பின்னா் படிப்படியாக உயா்த்தப்பட்டு இறுதிக்கட்ட நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

2020-ஆம் ஆண்டின் முதல் திட்டம்: ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் இந்த ராக்கெட், இஸ்ரோ சாா்பில் விண்ணில் ஏவப்படும் 14-ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அத்துடன், 2020-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் விண்வெளித் திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com