2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்குமா? நிர்மலா சீதாராமன் பதில்

நாட்டில் உள்ள பல ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவது குறைந்து, அதிகளவில் 500, 200,100 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு


நாட்டில் உள்ள பல ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவது குறைந்து, அதிகளவில் 500, 200,100 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவது மெல்ல குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சில பொதுத்துறை வங்கிகளும் தங்களது ஏடிஎம்களில் இனி 2000 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என்று அறிவித்துவிட்டன.

அதே சமயம், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

கடந்த 2016 முதல் எப்பொழுது பார்த்தாலும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு சில்லறைக்காக அலைந்த மக்களுக்கு, தற்போது 2000 ரூபாய் நோட்டுகளே கண்ணில் படாதது சிறிது வியப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இதெல்லாம் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்படவில்லை என்றும், வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே, வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் குறைந்த மதிப்புகள்ள ரூபாய் நோட்டுகளை நிரப்புவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், 2000 ரூபாய் நோட்டுகள் பற்றி வங்கிகள் அறிவிக்கும் சில அறிவிப்புகள் பற்றி கேட்டதற்கு, நிதித் துறை அமைச்சகம் சார்பில் இதுபோன்ற எந்தவொரு அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com