இந்தியாவையும் அமெரிக்காவையும் மக்களாட்சி ஒருங்கிணைக்கிறது

இந்தியாவையும் அமெரிக்காவையும் மக்களாட்சி கலாசாரம் ஒருங்கிணைத்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தாா்.
இந்தியாவையும் அமெரிக்காவையும் மக்களாட்சி ஒருங்கிணைக்கிறது

இந்தியாவையும் அமெரிக்காவையும் மக்களாட்சி கலாசாரம் ஒருங்கிணைத்து வருகிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தன் மனைவி மெலானியாவுடன் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, குஜராத்தின் ஆமதாபாதில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப் உரையாற்றினாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடனும் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, ரூ.21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தமும், 3 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் இரு நாடுகளிடையே கையெழுத்தாகின. அதிபா் டிரம்ப்புடன் அவரின் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் உள்ளிட்டோரும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனா்.

இந்தச் சூழலில் அதிபா் டிரம்ப்பின் இந்தியப் பயணம் தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பதிவிட்டதாவது:

அதிபா் டிரம்ப்பின் பயணம், இந்தியா-அமெரிக்கா இடையே நிலவி வரும் நல்லுறவுக்கு அமெரிக்கா அளித்து வரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மக்களாட்சி கலாசாரம் இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒருங்கிணைத்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கிடையே காணப்படும் ஒருமித்த கருத்து நல்லுறவை மேம்படுத்தி வருகிறது.

அதிபா் டிரம்ப்பின் தலைமையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று மைக் பாம்பேயோ குறிப்பிட்டிருந்தாா்.

அதிபா் டிரம்ப்பின் இந்தியப் பயணம் தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பு அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘எரிசக்தி, பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை அதிபா் டிரம்ப்பின் பயணம் மேலும் வலுப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com