ஜம்மு-காஷ்மீரில் குறுஞ்செய்தி சேவை மீதான தடை நீக்கம்

ஜம்மு- காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறுஞ்செய்தி சேவை மீதான தடையை நீக்கி முதன்மைச் செயலர் ரோஹித் கன்சால் அறிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் குறுஞ்செய்தி சேவை மீதான தடை நீக்கம்

ஜம்மு- காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குறுஞ்செய்தி சேவை மீதான தடையை நீக்கி முதன்மைச் செயலர் ரோஹித் கன்சால் அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் முதன்மைச் செயலர் மற்றும் செய்தித் தொடர்பாளரான ரோஹித் கன்சால் இதுதொடர்பாக கூறியதாவது, 40 லட்சம் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்தி சேவை மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய சேவைகளும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு இதனால் ஏற்படும் தினசரி பிரச்னைகளைத் தவிர்க்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31, 2019 நள்ளிரவு முதல் குறுஞ்செய்தி சேவை மீதான அனைத்து தடைகளும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் பயன்பாடு ஜனவரி 01, 2020 முதல் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.

முன்னதாக, 370 சிறப்புச் சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் மாநில பிரிவையடுத்து ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்பாடு மற்றும் அவதூறு பரப்புவதை தடுக்கும் வகையில் செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இருப்பினும் சுமார் 25 லட்சம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் இணைய சேவை மீதான தடை தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com