புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம் தான் நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

நாட்டின் இளம் விஞ்ஞானிகள் புதுமையான படைப்புகளை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று அதனை உற்பத்தி மற்றும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 
புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம் தான் நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

நாட்டின் இளம் விஞ்ஞானிகள் புதுமையான படைப்புகளை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்று அதனை உற்பத்தி மற்றும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். 

இந்திய அறிவியல் கூட்டமைப்பின் 107-வது அமர்வு பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது,

புதிய ஆண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் எனது முதல் நாள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுடன் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2020-ஆம் ஆண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நேர்மறையான நம்பிக்கையுடன் தொடங்கும்போது, ​​நமது கனவு அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியா 52-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். நமது நாட்டின் திட்டங்கள் முந்தைய 50 ஆண்டுகளை விட கடந்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியிலான வணிக வளர்ச்சியை உருவாக்கியுள்ளன. இச்சாதனைகளுக்காக நமது விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன்.

விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பெற்ற வெற்றிகளைப் போன்று ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் பிரதிபலிக்க வேண்டும். நீர், ஆற்றல், உணவு மற்றும் தாதுக்களின் பரந்த கடல் வளங்களை நாம் ஆராய்ந்து அதனை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதன் வெற்றியைப் பொறுத்தது. இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் எல்லைகளை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நாட்டிலுள்ள இளம் விஞ்ஞானிகளுக்கான எனது குறிக்கோள் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் முன்னேற்றம். இந்த நான்கு படிகள் நம் நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.

புதுமையான படைப்புகளின் மூலம் காப்புரிமை பெறுவோம், அது நமது உற்பத்தியை எளிமையாக்கும். மேலும் அந்த தயாரிப்புகளை நமது நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும்போது, ​​அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்று நான் நம்புகிறேன், புதுமை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும், அதுவே புதிய இந்தியாவின் பரிணாமம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com